முடிவுக்கு வந்தது ஒரு சகாப்தம்..! உலகக்கோப்பையிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சுற்று-16 போட்டியில் ஸ்பெயின் அணியிடம் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக்கோப்பை பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த உலகக்கோப்பையே தனது கடைசி உலகக்கோப்பை என ஏற்கனவே அறிவித்திருந்த ரொனால்டோ, தோல்விக்குப் பின்னர் உலகக்கோப்பை மேடைக்கு உணர்ச்சிப்பூர்வமாக விடை கொடுத்துள்ளார்.
உலகக்கோப்பை வரலாற்றில்
41 வயதிலும் தனது அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடிய ரொனால்டோ, இந்த தொடரில் நாக்-அவுட் சுற்றில் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
Some goodbyes hit harder 💔
— Gabbar (@Gabbar0099) July 7, 2026
This video breaks millions of hearts: pic.twitter.com/pIHXu4afFt
சர்வதேச கால்பந்து வரலாற்றில் ரொனால்டோவின் சாதனைகள் தனித்துவமானவை. போர்ச்சுகல் அணிக்காக 146 சர்வதேச கோல்கள் அடித்து, உலகிலேயே அதிக சர்வதேச கோல்கள் அடித்த வீரராக அவர் திகழ்கிறார்.
அதேபோல், 233 சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதிக சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற உலக சாதனையையும் தனது வசம் வைத்துள்ளார்.
உலகக்கோப்பை வரலாற்றில் போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரரும் ரொனால்டோதான்.
அதிக கோல்கள்
மேலும், 2006 முதல் 2026 வரை நடைபெற்ற 6 உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ந்து விளையாடியதுடன், அவற்றில் கோல் அடித்த உலகின் ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
யூரோ கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராகவும் அவர் இன்னும் முதலிடத்தில் உள்ளார்.
கிளப் மட்டுமல்ல, தேசிய அணிக்காகவும் போர்ச்சுகலின் பொற்காலத்தை உருவாக்கியவர் ரொனால்டோ. 2016-ஆம் ஆண்டு யூரோ கோப்பையை வென்று, போர்ச்சுகலின் முதல் பெரிய சர்வதேச பட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக் கோப்பைகளையும் போர்ச்சுகல் வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.
தனது உலகக்கோப்பை பயணத்தை நிறைவு செய்த பின்னர் பேசிய ரொனால்டோ, "நான் எனது முழு உழைப்பையும், ஆன்மாவையும் கால்பந்தாட்டத்திற்காகக் கொடுத்துள்ளேன். எனது சிறந்த பங்களிப்பை அளித்துவிட்டேன்.
இப்போது முழு மனநிறைவுடனும், தூய்மையான மனசாட்சியுடனும் உலகக்கோப்பை மேடையிலிருந்து விடைபெறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கண்ணீரில் கனத்த நிமிடங்கள்
மேலும் சர்வதேசப்போட்டிகளிலும் ஓய்வு பெறுவதைப்பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இறுதி விசில் ஒலித்ததும், ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கைகளை உயர்த்தி நன்றி தெரிவித்தார். அவரது முகத்தில் இருந்த ஏமாற்றமும், கண்ணீரும் உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதையும் கனக்க வைத்தது.

கோப்பைகள் மட்டுமே ஒரு வீரரின் மகத்துவத்தை தீர்மானிக்காது என்பதை தனது வாழ்க்கையால் நிரூபித்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
உலகக்கோப்பை கோப்பையை வெல்லும் கனவு நிறைவேறாமல் போயிருந்தாலும், கால்பந்து வரலாற்றில் என்றும் அழியாத ஒரு வாழும் ஜாம்பவானாக அவரது பெயர் நிலைத்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam