நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு
நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியலை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
17.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைது நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அதன்படி, தற்போது கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள், உதவியாளர்கள் என அடையாளம் காணப்பட்ட 53 கடத்தல்காரர்கள் மற்றும் 296 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட 349 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம்
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இந்த பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
