கொழும்பில் இருந்து சென்ற தொடருந்தில் ஏற்பட்ட மோதல்: மூவர் காயம்
கொழும்பில் இருந்து பயணித்த தொடருந்தில் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கம்பஹா வரை தொடருந்தில் பயணித்த யுவதிக்கு கோட்டை நிலையத்தில் இருந்து ஹுனுப்பிட்டிக்கு மட்டும் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கம்பஹாவில் வைத்து அவரை சோதனையிட்ட பரிசோதகர்கள் அபராதம் என கூறி அவரிடம் கட்டணம் வசூலிக்க முற்பட்டுள்ளனர்.
பயணச்சீட்டு பரிசோதகர்கள்
இதனால் அங்கு யுவதியின் சகோதரர் ஒருவரும், பயணச்சீட்டு பரிசோதகர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோதலில் காயமடைந்தவர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடருந்து திணைக்களம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
