ஜனாதிபதியின் செயலாளரால் புதிய தலைவர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் சுவசரிய மன்றத்திற்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.
நியமனக் கடிதங்கள்
இதன்படி, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, ஜோசப் யோகராஜா (Joseph Yogarajah) மற்றும் லரீனா அப்துல் ஹக் (Lareena Abdul Haq) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுவசரிய மன்றத்திற்கும் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, 1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவராக ஏ.எம்.என். ரத்நாயக்க மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆர்.ஜே.எம்.ஏ.பீ.சம்பத் மற்றும் நளீன் பெரேரா ஆகியோர் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |