நினைவேந்தலுக்கு அனுமதி - மக்களின் உரிமைகளை அடக்கப் புதிய சட்டங்களா! எழுந்துள்ள குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Tamils Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh Oct 26, 2026 12:31 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் அனுமதி வழங்கும் தற்போதைய அரசு, மறுபுறம் நாட்டின் சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களை ஒடுக்குவதற்காகப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயல்கின்றது என்று சர்வஜன அதிகாரம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அக்கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம்

அவர் மேலும் கூறுகையில்,

"திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பில் அரசு காட்டும் தாராளமய அணுகுமுறையையும், மறுபுறம் நாட்டு மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் அடக்குமுறைச் சட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது தவறாகப் பயன்படுத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

நினைவேந்தலுக்கு அனுமதி - மக்களின் உரிமைகளை அடக்கப் புதிய சட்டங்களா! எழுந்துள்ள குற்றச்சாட்டு | New Laws To Suppress People S Rights

அரசை விமர்சிப்பவர்கள், தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடுபவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படும் நிலை உருவாகக்கூடாது. இவ்வாறான சட்டங்கள் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தையும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் ஜனநாயக உரிமையையும் கடுமையாகப் பாதிக்கும்.

அத்துடன், கூட்டாட்சி முறை அல்லது சமஷ்டி தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

உடனடியாகக் கவனம்

மூன்றிலிரண்டு பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்ததாகக் கூறும் அரசு, மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கத் தவறி வருகின்றது.

பெறுமதி சேர் வரி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் கல்வி உபகரணங்கள் மீதான வரிகள், மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றால் மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகின்றது.

நினைவேந்தலுக்கு அனுமதி - மக்களின் உரிமைகளை அடக்கப் புதிய சட்டங்களா! எழுந்துள்ள குற்றச்சாட்டு | New Laws To Suppress People S Rights

அரசு இதற்கு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பான விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகள் பெரும் சந்தேகங்களை எழுப்புகின்றன.

நேரடியாகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மக்களை அடக்குவதற்குப் பதிலாக, சட்டங்களையும் கடுமையான ஒழுங்குவிதிகளையும் பயன்படுத்தி இராணுவ ஆட்சிக்கு நிகரானதொரு அடக்குமுறைச் சூழலை உருவாக்க அரசு முற்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே புதிய சட்டங்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக மட்டுமே அமைய வேண்டும் என குறிப்பிட்டார்.

இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வாக்களித்தால் கைகளை வெட்டினர் - சந்தி சந்தியாகச் சடலங்கள்! கடந்த காலத்தை நினைவூட்டிய சாகர

வாக்களித்தால் கைகளை வெட்டினர் - சந்தி சந்தியாகச் சடலங்கள்! கடந்த காலத்தை நினைவூட்டிய சாகர

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US