தண்டப்பணம் செலுத்துவது குறித்து புதிய சட்டம் விரைவில் அறிமுகம்
போக்குவரத்தின் போது ஏற்படுகின்ற தவறுகளுக்கான தண்டப்பணம் ஆன்லைன் ஊடாக செலுத்துதல் மற்றும் அதுதொடர்பான சட்ட திட்டங்களை ஒழுங்கு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதி அமைச்சி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போக்குவரத்தின் போது வாகனங்களால் இடம்பெறும் தவறுகள் தொடர்பாக தண்டப்பணம் செலுத்தும் போது தற்போது நடைமுறையில் இருக்கும் முறைமை தொடர்பாக ஆராய்ந்து புதிய முறைமை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் புதிய முறைமையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் செயற்ப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைச்சர் சரத் வீரசேகரவின் கண்காணிப்பில் தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கி, மக்கள் வங்கி, இலங்கை தடை நீக்கல் நிறுவனம் மற்றும் இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
அத்துடன் இந்த குழுவின் பரிந்துரை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வழங்க வேண்டும் என்பதுடன் அதன் பின்னர் குறித்த பரிந்துரைகளை கருத்திற்கொண்டு புதிய சட்ட இயற்றுதல் மற்றும் தொழிநுட்பத்தை பயன்டுப்படுத்தும் முறை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த புதிய முறைமை ஆரம்பமாக அதிவேக பாதைகளில் மேற்கொள்ளவும் அதன் பின்னர் ஏனைய வீதிகளுக்கு படிப்படியாக அறிமுகப்படுத்தவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நீதி அமைச்சர் அலிசப்ரி (Ali Sabry) தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa), பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara), போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி (Pavithra Vanniyarachchi) மற்றும் சட்டமா அதிபர் சன்ஜய ராஜரத்னம் (Sanjaya Rajaratnam) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய வம்சாவளி குடும்பம் News Lankasri
