தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம்: அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்திற்கான புதிய திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க செயலாளர் கனக ஹேரத் (Kanaka Herath) தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தலைப்பில் நேற்று (09.05.2024) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
"28 வருடங்களுக்கு பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய நடவடிக்கைகள்
இதற்கமைய, புதிய சட்டமூலமானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
மேலும், தேசிய இணைய பாதுகாப்பு சட்டம் மே மாதம் வரைவு செய்யப்பட உள்ளது.
அதுமாத்திரமன்றி, மாணவர்களுக்கான 1000 இணக்கமான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 பள்ளிகளுக்கு வசதியான வகுப்பறைகள் வழங்கப்படும்.
அதேவேளை, தகவல் தொழில்நுட்ப துறை பட்டதாரிகள் மற்றும் NVQ 4 பரீட்சார்த்திகளுக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
