யாழ். கிட்டு பூங்காவில் ஆரம்பமாகும் கார்த்திகை வாசம் நிகழ்வில் திருமாவளவன்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14.11.2025) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
கண்காட்சியைப் பார்வையிடவரும் மாணவர்களுக்கு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துனைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இத் தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்து கொள்கிறார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இக் கண்காட்சி இம் மாதம் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.
கண்காட்சியைப் பார்வையிடவரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம்முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி! அம்பலமாகும் ஆதாரங்கள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri