பேருந்தில் இருந்து விழுந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக பலி
இரத்தினபுரி, கஹவத்தை பிரதேசத்தில் தனியார் பேருந்தில் இருந்து விழுந்து பேருந்தின் பின்புற சக்கரத்தில் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
4 பிள்ளைகளின் தாயான 68 வயதான கோனார முதியன்செலகே புஞ்சிமணிகே என்ற பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாகந்துரவிலிருந்து கஹவத்தை நோக்கிச் சென்ற தனியார் பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓட்டுநர் கைது
பேருந்தில் இருந்து இறங்க முயன்ற போது பேருந்தில் இருந்து கீழே விழுந்து, பின்புற டயரில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கஹவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்து மாகந்துரவிலிருந்து கஹவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்கும் இடத்தை மறந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
பின்னர் பேருந்து நிற்கும் முன்பே பேருந்தில் இருந்து இறங்கியதால் விபத்து ஏற்பட்டதாக பேருந்து ஓட்டுநர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.