தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டம்
மட்டக்களப்பு-மாந்தீவில் புதிய சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாந்தீவை பார்வையிடுவதற்காக நேற்று (23.02.2024) சென்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மாந்தீவு
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் கடலில் அமைந்துள்ள மாந்தீவு சுமார் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருகின்றனர்.
தனிமைப்படுத்துவதற்கான வசதி
மாந்தீவு, இலங்கை விமானப்படையால் கோவிட் காலத்தில் கையகப்படுத்தப்பட்டு, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கியது.
மாந்தீவில் தற்போது 2 தொழுநோயாளிகள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தொழுநோயாளிகள் இருக்கும் இடத்துக்குகுறித்த 2 தொழு நோயாளிகளையும் மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன."என கூறியுள்ளார்.