நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புதிய முயற்சி - ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்

Anura Kumara Dissanayaka President of Sri lanka Sri Lanka Government
By Rakesh Aug 07, 2026 07:37 AM GMT
Report

புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்கவும் மேம்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தை உயர்த்தவும் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளை உருவாக்க உதவியதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலமே மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதம் மாறுகிறது என்றும் அதனைச் சரியாக அடையாளம் காண்பவர்களே எதிர்கால உலகை வெல்ல முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு -செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று(05.08.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி மத்திய நிலையத்தின் கீழ் விசேட திட்டம்

மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் தேவையான தகவல்கள் மற்றும் தரவுகளை வழங்குவதற்கான முறைமையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமைச்சரவை மட்டத்தில் ஏற்கனவே இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புதிய முயற்சி - ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் | New Initiative To Build The Country S Economy

வெவ்வேறு அமைச்சுக்களின் கீழ் உள்ள ஆராய்ச்சிப் பிரிவுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்கும்போது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் விசேட பிரிவு ஒன்றை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை 

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள 14 நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புதிய முயற்சி - ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் | New Initiative To Build The Country S Economy

இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் யானை வேலி அமைத்தல் மற்றும் குறைந்த செலவிலான சுற்றாடல் நேய கட்டிடங்களை அமைத்தல் போன்ற ஆராய்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை போன்ற நிறுவனங்களால் வழங்கப்படக்கூடிய பங்களிப்பும் ஆராயப்பட்டது.

கொள்முதல் செயல்முறை தொடர்பான சிக்கல்கள்

விவசாய அமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுக்களின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பாடலுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் கருவா சார்ந்த தயாரிப்புகள் குறித்த ஆராய்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டதோடு ஆயுர்வேத தயாரிப்புகள் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் தடைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புதிய முயற்சி - ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் | New Initiative To Build The Country S Economy

தேசிய விஞ்ஞான மன்றத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்போது கொள்முதல் செயல்முறை தொடர்பான சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய விஞ்ஞான ஆணைக்குழு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சிற்கு பொருத்தமான ஒரு கொள்கையை தயாரித்து சமர்ப்பித்துள்ளதாகவும், புலமைச் சொத்து தொடர்பான கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புதிய முயற்சி - ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் | New Initiative To Build The Country S Economy

அனர்த்தங்களுக்கு முன்கூட்டியே தயாராவதற்கான விஞ்ஞானபூர்வமான வரைபடம் வரும் ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளதாகவும், பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையில் தொழில்நுட்பப் பரிமாற்றத் திட்டம் ஒன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

காட்டு யானைகள் ரயிலில் மோதுவதைத் தடுப்பதற்காக ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ள வெப்ப உணர் கெமரா கட்டமைப்பை பொருத்தும் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக ஒப்படைக்க கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக ஒப்படைக்க கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா - தலவாக்கலை வீதி தாழிறக்கம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நுவரெலியா - தலவாக்கலை வீதி தாழிறக்கம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US