போப் பிரான்சிஸ் குறித்து வத்திக்கான் வெளியிட்ட புதிய தகவல்
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (Pope Francis) பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக ஜெமெல்லி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல் புகைப்படம்
போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது முதல் புகைப்படத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
ஜெமெல்லி வைத்தியசாலையின் 10 ஆவது மாடியில் உள்ள போப்பாண்டவரின் குடியிருப்பில் மற்றைய பாதிரியார்களுடன் திருப்பலி கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார் எனவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
