இலங்கையில் செயற்படும் நெதர்லாந்து நிறுவனத்தின் நிதி குறித்து விசாரணை
இலங்கையின் இரண்டு மருத்துவமனைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு சுகாதார நிறுவனம், பிரித்தானிய வேர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் வெளிநாட்டுக் கணக்கில் செய்துள்ள வைப்புத்தொகையை டச்சு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வேர்ஜின் தீவுகளில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆதாய உரிமையாளர்களில் ஓருவர், இலங்கையின் ஒரு முக்கிய தொழிலதிபராகும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
ஊழல் தொடர்பான விசாரணை
அதேநேரம், டச்சு நிதி புலனாய்வு சேவை, இந்த ஊழல் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக, செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து(Netherlands) நிறுவனத்தின், இலங்கைக்கான மருத்துவமனை திட்டங்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
