புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு
புதிய லங்கா சுதந்திரக் கட்சியின், புதிய தலைமை அலுவலகம் இன்று (05) காலை பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தலைமையில் இந்த கட்சி செய்யற்படுகிறது.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்பு
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.
ஏற்கனவே கடந்த வார இறுதியில் நடைபெற்ற தமது பெற்றோர் வழி சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் சந்திரிக்கா பங்கேற்கவில்லை.
மேலும், அவருக்கு அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற விடயமும் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை, இந்த கட்சியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் எதிர்வரும் நாட்களில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது