அமைச்சுக்களின் நிறுவன, சட்ட கட்டமைப்பில் திருத்தம்! வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல் (PHOTO)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நேற்று முதல் அமுலாகும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை திருத்தியமைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தேசிய முன்னுரிமை வேலைத்திட்டத்தின் கீழ் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பில் ஜனாதிபதி செயலகம் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு திருத்தப்பட்டுள்ளது.
மேலும், நிதியமைச்சு, வெளிவிவகார அமைச்சு, திறன் மேம்பாட்டுத் தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சின் நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பு ஆகியவற்றிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.






