பிரித்தானியாவில் மில்லியன் கணக்காண மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! வெளியான காரணம்
பிரித்தானியாவில் தேர்தலில் வாக்களிப்பதற்கான இலவச வாக்காளர் அதிகாரச் சான்றிதழ் பெற 85,000 பேர் மட்டுமே இணையமூடாக விண்ணப்பித்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், 2.1 மில்லியன் மக்கள் வாக்குப்பெட்டியில் வாக்களிக்க அடையாள அட்டையைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்ற அச்சம் எழுந்துள்ளது.
மில்லியன் கணக்கிலான மக்கள் வாக்களிக்க முடியாமல் போகும்
மேலும், இலவசமாக அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் இன்று (26.4.2023) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மில்லியன் கணக்கிலான மக்கள் வாக்களிக்க முடியாமல் போகும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மே மாத உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இங்கிலாந்தில் உள்ள மக்கள் முதல் முறையாக புகைப்பட அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்பது புதிய விதியாகும்.
கடவுச்சீட்டு அல்லது சாரதிகளுக்கான உரிமம் உள்ளிட்ட சான்றுகளை காண்பித்து வாக்களிக்கலாம், ஆனால் குறைந்த வருவாய் கொண்ட அப்பாவி மக்களுக்கு அதுபோன்ற சான்றுகள் இருக்க வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்களால் வாதிடப்பட்டது.
விமர்சனம்
தற்போது 100,000 மக்களுக்கும் குறைவானவர்களே இலவச அடையாள அட்டையை பெற விண்ணப்பித்துள்ளதால், மே 4ம் திகதி முன்னெடுக்கப்படும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் மக்களில் 2 மில்லியன் பேர்களுக்கு அடையாள அட்டை இல்லை என தெரிய வந்துள்ளது.
"வாக்காளர்களின் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதன் மூலமும், பாதுகாப்பு ஆய்வு நடைமுறைகளைத் தகர்ப்பதன் மூலமும் அவை நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன"என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 4,467 பேர்கள் விண்ணப்பித்துள்ளனர். கட்டாயம் அடையாள அட்டை வேண்டும் என்ற விதி 2.1 மில்லியன் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பதாகும் என்ற ஆதரவு குரலும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.