மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப புதிய கட்டமைப்பு - ஜனாதிபதி தெரிவிப்பு
டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை விரைவாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கு புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதுடன், காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் குறித்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைகே குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை
நிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயற்பாடு, டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளது எனவும், மத்திய மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

டித்வா சூறாவளி காரணமாக மத்திய மலைநாட்டில் சுமார் 4 ஆயிரம் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன எனவும், நீண்டகாலமாக இடம்பெற்ற முறையற்ற நிர்மாணம், பயிர்ச்செய்கை மற்றும் பராமரிப்பு இல்லாததால் இது ஏற்பட்டுள்ளது எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரைவான தேசியக் கொள்கையின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய சட்டத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்ட அதிகார சபையின் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அபிவிருத்தி நடவடிக்கை
இந்த நடவடிக்கைகளுக்கு நிதியமொன்றை பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதிகள், மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்நாட்டு பணிப்பாளர் அலுவலகப் பிரதானி, அதன் விவசாயம் மற்றும் இயற்கை வள சிரேஷ்ட நிபுணர், உதவித் திட்ட அதிகாரி கிருஷாந்தி தாபரே ஆகியோருடன், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, அந்தத் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வகீஷா குணசேகர, சுகந்தி சமரசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர், பெருந்தொட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியலாளர் எல்.குமுது லால் போகஹவத்த மற்றும் துறைசார் அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam