நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய மின்சார சட்டமூலம்
மூன்று வாரங்களுக்கு முன்னர் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மின்சார சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புதிய மின்சார சட்டமூலத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று முன்தினம் (27) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
புதிய மின்சார சட்டமூலம்
அதற்கமைய, இந்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரம் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
மின்சாரத் தொழிலுக்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யும் நோக்கிலான இந்த சட்டமூலம் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.
அதனையடுத்து கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
