போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய திட்டம்: சுற்றிவளைப்பில் சிக்கிய சந்தேகநபர்
கைக்கடிகாரங்களில் போதைப்பொருள் பொதிகளை மறைத்து கொண்டு செல்லும் போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய முறை ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது தொடர்பில் அறியக்கிடைத்ததாகவும், இவ்வாறு போதைப்பொருளை கடத்த முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்த்துள்ளதாகவும் மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகஹஹேன - ஒலுபொடுவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் போது போதைப்பொருள் பொதிகளை கொண்டு செல்லும் முறையினை வெளிப்படுத்தியதாகவும் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
கடுமையான சோதனை
மேலும் சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலையதிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கபட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர் 33 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகத்திற்கு இடமின்றி பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் பொதிகளை விநியோகித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
