50 ஆண்டுகால பொலிஸ் சீருடையில் மாற்றம்!
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பொலிஸாரின் காக்கி நிற சீருடையில் மாற்றங்களை மேற்கொண்டு, புதிய சீருடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர் வரும் ஆண்டில் பொலிஸ் திணைக்களத்திற்கு புதிய சீருடை வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான நிறம் மற்றும் வடிவமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காக்கி நிறத்திற்கு பதிலாக நீல நிற சீருடையை அறிமுகப்படுத்த முதலில் கவனம் செலுத்தப்பட்டது.

எனினும், இலங்கை விமானப்படை ஏற்கனவே நீல நிற சீருடையைப் பயன்படுத்தி வருவதால், வேறு நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரே நிறத்திலான சீருடையை நீண்ட காலம் பயன்படுத்துவதால் ஏற்படும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தற்போதைய காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீருடை மாற்றத்திற்கு இணையான நடவடிக்கையாக, பொலிஸ் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கும், அவர்களுக்கான விசேட அபாயக் கொடுப்பனவை வழங்குவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பொலிஸாரின் காக்கி நிற சீருடை கடந்த 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan