இரண்டே நாட்களில் உயிரை பறிக்கும் புதிய வகை பக்டீரியா பரவல்
பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் அரிய வகை பக்டீரியா ஜப்பானில் (Japan) பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பக்டீரியா 'ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷொக் சிண்ட்ரோம்' (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சுக்களை இரத்தத்தில் பரவச் செய்து உடல் உறுப்புக்களை செயலிழக்க செய்கின்றது.
குறித்த நோய்த் தாக்குதலுக்குள்ளாகி இந்த மாதம் 2ஆம் திகதி வரை ஜப்பானில் 977 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
அதேவேளை, இது கடந்த வருடம் பதிவான 941 நோயாளர்கள் என்ற எண்ணிக்கையை வருடத்தின் முதல் பாதியிலேயே கடந்துள்ளது.
எனினும், இந்த பக்டீரியா ஒருவரின் உடலிலிருந்து இன்னொருவரின் உடலுக்கு நேரடியாக பரவுவது அரிது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பக்டீரியா பாதிப்பின் முதல் அறிகுறியாக தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த இரத்த அழுத்தம், மூட்டுக்களில் வலி, வீக்கம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் படிப்படியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயலிழந்து 48 மணிநேரத்தில் மரணத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
சிகிச்சை
மேலும், இந்த பக்டீரியா பரவல் வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்டோரில் 30 சதவீதமானோர் மரணிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த நோய்க்கு நரம்பு வழியாக நுண்ணுயிர் எதிர்ப்புகளை வழங்கி சிகிச்சை அளிக்கப்படுவதோடு திரவ மருந்துகள் கொடுக்கப்பட்டு குருதி அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகின்றது.
அத்துடன், சில நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சை அவசியமாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |