காலிஸ்தான் தீவிரவாதியை கொலை செய்ய திட்டம்: அமெரிக்க நீதிமன்றில் முன்னிலையான இந்தியர்
அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை (Gurpatwant Singh Pannun),கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தா அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிக் என்று அழைக்கப்படும் 53 வயதான குப்தா, நியூயோர்க்கில் காலிஸ்தானிய தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் 2023 ஜூன் 30ஆம் திகதியன்று செக் குடியரசில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
மனு தாக்கல்
அத்துடன் இந்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்தநிலையில் குப்தா திங்களன்று மன்ஹாட்டனில் உள்ள பிராந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது தமது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று கூறி குப்தாவின் சட்டத்தரணி நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்ததுடன் அவர் குற்றமற்றவர் என்பதற்கான வாதங்களையும் முன்வைத்தார்.
இதனையடுத்து எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீக்கிய பிரிவினைவாத இயக்கம்
விசாரணையின்போது முன்னிலையான அமெரிக்க சட்டமா அதிபர் மெரிக் கார்லேண்ட், அமெரிக்காவின் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சிகளை நாடு பொறுத்துக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தை ஆதரித்ததற்காக ஒரு அமெரிக்க குடிமகனை குறிவைத்து படுகொலை செய்ய இந்திய அரச அதிகாரி ஒருவரால் இயக்கப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டத்தின் கீழ் நிகில் குப்தா, அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்வார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குப்தா மீது வாடகைக்கு கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இன்று விசாரணை நடைபெற்றபோது காலிஸ்தானிய ஆதரவாளர்கள் நீதிமன்றுக்கு வெளியில் பல்வேறு கோசங்களை எழுப்பினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        