சுற்றுலா பயணிகளால் எழுந்துள்ள சர்ச்சை : செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் சுற்றுலாப் பயணிகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தென் கரையோரத்தில் நடைபெறும் இவ்வாறான வியாபாரங்கள் தொடர்பில் நேற்று (07) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வரும் சில சுற்றுலா பயணிகள் தற்போது விடுமுறை நாட்களில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தென் கடற்கரையில் காலி, உனவட்டுன மற்றும் மிரிஸ்ஸ போன்ற சுற்றுலாப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் உள்ளனர்.
அந்தப் பகுதிகளில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |