மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கான புதிய ஒப்பந்தம் குறித்து அதிருப்தி
மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கான புதிய ஒப்பந்தம் குறித்து பொது நிதி குழுவின் (CoPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா கவலை எழுப்பியுள்ளார்.
இந்த விடயத்தில் இன்னும் ஒப்பந்ததாரர் உடனோ அல்லது 500 மில்லியன் டொலர் வசதி குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து, சீன EXIM வங்கியுடனோ பேச்சுவார்த்தைகள் முடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம்
226 பில்லியன் ரூபாய் மதிப்பு கொண்ட மத்திய விரைவுச்சாலை திட்டத்தை தமது குழு (CoPF) மதிப்பாய்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
"இந்த நிலையில், நீண்ட கால சீன விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டால் இரு தரப்பினரும் சமமான நன்மைகளைப் பெறும் ஒரு நியாயமான, சமச்சீர் ஒப்பந்தத்தை தமது குழு வலியுறுத்துவந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



