சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி! கைமாறும் இராணுவ தளபதி பதவி - யார் இந்த விகும் லியனகே...!
ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே 31 அன்று இராணுவத் தளபதி பதவியை விட்டு விலகுகிறார்.
இதனையடுத்து 2022 ஜூன் முதலாம் திகதியன்று பாதுகாப்புப் படைகளின் புதிய பிரதானி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக செயற்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் தற்போதைய படைகளின் பிரதானியான மேஜர் ஜெனரல் விகும் லியனகே தனது பதவியை விட்டு விலகிய பின்னர், ஜூன் முதலாம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகும் லியனகே, இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாகயும் கடமையாற்றினார்.
இராணுவத்தின் 58வது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் படைகளின் தலைமையதிகாரியாக பதவியேற்றார்.
இந்தநிலையிலேயே எதிர்வரும் முதலாம் திகதி முதல் அவர் இலங்கையின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri