அரசியல் நெருக்கடியால் இராணுவத்திற்குள் குழப்பம் - பதவி விலகும் இராணுவ தளபதி
சமகால இராணுவ தளபதி சவேந்திர சில்வா எதிர்வரும் 31ஆம் திகதி பதவி விலகவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய இராணுவ தளபதியாக, தற்போதைய படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி புதிய இராணுவ தளபதி தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே 31ஆம் திகதி இராணுவத் தளபதி பதவியை விட்டு விலகுவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் கடந்த 15ஆம் திகதி உறுதிப்படுத்திய சம்பவம் தற்போது உண்மையாகவே நடந்துள்ளது.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை பதிவு செய்திருந்தார்.
இலங்கையின் இராணுவ புலனாய்வை செயலிழக்கச் செய்த அமெரிக்கா! உண்மைகள் அம்பலம்(Video) |
புலம்பெயர் தமிழ் அமைப்புக்குள் ஆழ ஊடுருவிய இலங்கை புலனாய்வாளர்கள் (VIDEO) |
முதலாம் இணைப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இராணுவ கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது தம்மை பாதுக்காக இராணுவத்தினர் தவறியுள்ளதாக அரசியல்வாதிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அரசியல் குழப்பம்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டன.
இவ்வாறான வன்முறையின் போது அரசியல்வாதிகளான தமக்கு பாதுகாப்பு வழங்காமல், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சார்பாக இராணுவம் செயற்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதிக்கு அழுத்தம்
இதன் காரணமாக இராணுவ தளபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும், நிலையில் அவர் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் ஜனாதிபதியோ அல்லது இராணுவ தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.