புலம்பெயர் தமிழ் அமைப்புக்குள் ஆழ ஊடுருவிய இலங்கை புலனாய்வாளர்கள் (VIDEO)
இலங்கை ஜனாதிபதி இராணுவத்தினரை அனைத்து துறைகளிலும் வைத்துள்ளமையானது தமிழ் மக்களுக்கான அடக்குமுறை ஒருபுறமிருக்க,எதிர்காலத்தில் தமது இராணுவமே அரசுக்கு எதிராக திசை திரும்பக்கூடிய நிலை ஏற்படும் என்ற அச்சமே பிண்ணனியில் இருக்க முடியும் என பிரித்தானியாவின் வேல்சில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் (அரூஸ்) தெரிவித்துள்ளார்.
சமூக மட்டத்தில் இராணுவம் தொடர்பில் தொக்கி நிற்கும் கேள்விகள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூகோள அரசியலில் சிக்குப்பட்ட இலங்கையானது பல நாடுகளின் அழுத்தத்தின் கீழ் காணப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கை தலைவர் அனைவரையும் பார்த்தும் பயப்படும் நிலையிலேயே உள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனவே,எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் உடைந்து விழும் போது இங்குள்ள படைத்தளபதிகளை எந்த நாடும் ஆட்சியை தூக்கி எறிவதற்காக பயன்படுத்தி விடும் என்று தற்போது சவேந்திர சில்வா மீதான பயத்தில் ஜனாதிபதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.மின் உற்பத்திக்கான எண்ணையை கப்பலில் இருந்து இறக்குமதி செய்ய முடியாத கடும் நெருக்கடியினை சந்தித்து தற்போது இலங்கை இருளில் மூழ்கியுள்ளது.
அதாவது தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்ற பின்னர் 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சில தமாதங்களிலேயே 37 துறைகளில் இராணுவத்தினரை நியமித்துள்ளதுடன்,முக்கியமான மூன்று துறைகளுக்கும் ஓய்வுப்பெற்ற அராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார்.
இந்த செயற்பாட்டிற்கு பல நாடுகளும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.