விரைவில் புதிய அமைச்சரவை நியமனம்
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் நிதிப்பிரச்சினை காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் முதலில் தீர்மானித்திருந்தது.

பத்து உறுப்பினர்களின் பட்டியல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ள பத்து உறுப்பினர்களின் பட்டியலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அக்கட்சி அண்மையில் கையளித்துள்ளது.
ஆனால் அந்தப் பட்டியலில் இருந்து பவித்ராதேவி வன்னியாராச்சி மட்டுமே நியமிக்கப்பட்டார்.
புதிய அமைச்சர்கள் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri