புதிய பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்: ஜேவிபி குற்றச்சாட்டு!
பயங்கரவாதத்துக்கு எதிராக எழுச்சி பெறும் மக்களையும் தொழிற்சங்கங்களையும் ஒடுக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது என ஜேவிபியின் நாமடாளுன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (28.03.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் குரல்
மேலும் அவர் கூறியதாவது, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது. இலாபம் ஈட்டும் அரசு முயற்சிகளைப் பேரம் பேசி விற்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் ஸ்ரீலங்கா காப்புறுதி போன்ற நிறுவனங்கள் இந்த பகுதிக்குள் வருகின்றன.
அதேநேரம் இவற்றுக்கு எதிராக மக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த பயங்கரவாத எதிர்ப்பு யோசனை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தற்காலிக ஏற்பாடுகளாகக் கொண்டுவந்தார். எனினும், தங்களுக்கு எதிரான மக்களின் குரலை நசுக்க இதுவரை அனைத்து அரசாங்கங்களும் இந்த தற்காலிகச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் தீவிரமானது
'பயங்கரவாதம்' என்ற வார்த்தையின் விளக்கம் மிகவும் தீவிரமானது. யோசனையில் பயங்கரவாதத்தின் விளக்கம் அளவுகோல்களுக்கு எதிரானது என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த யோசனையைத் தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் தமது தரப்பு
எடுக்கும் என்று குறிப்பிட்ட விஜித ஹேரத் உயர்நீதிமன்றம் செல்லப்போவதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
