புதிய விலங்கு நலச் சட்டம் அறிமுகம்: தண்டனைகள் அறிவிப்பு
இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் வழிகாட்டலின் கீழ், விலங்குகள் மீதான கருணை, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அவற்றின் நல்வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் இப்புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மத அல்லது கலாச்சார நிகழ்வுகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும், விலங்கின் கால்களில் முள் வளையங்கள் அணிவிப்பது, சங்கிலியால் கால்களை கட்டுவது மற்றும் கம்பிகளால் கட்டுவது போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
விலங்குகளை மிதமிஞ்சி நடக்க வைப்பது, அதிக சுமை ஏற்றுவது, சித்திரவதை செய்வது, வேதனையை ஏற்படுத்தும் வகையில் கயிறு அல்லது சங்கிலியால் கட்டிப்போடுவது ஆகியவை குற்றமாகும்.
விலங்குகளை கொண்டு செல்லுதல், அடைத்து வைத்தல், விற்பனை செய்தல், குட்டிகளைப் பெருக்குதல், அவற்றுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு அளித்தல் போன்ற விவகாரங்களில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
விலங்குகளை கொடூரமாக நடத்துதல் அல்லது கொடூரமாகக் கொல்லுதல், கர்ப்பிணி விலங்குகளைக் கொல்லுதல், பொறிகளை வைத்து விலங்குகளைப் பிடித்தல், பறவைகளை சட்டவிரோதமாக கூண்டில் அடைத்து வைத்தல், நோயுற்ற விலங்குகளை பொது இடங்களில் இறக்க விடுதல், தகுதியற்ற நபர்கள் விலங்குகளுக்குச் சிகிச்சை அளித்தல், சட்டவிரோத வேட்டையாடுதல், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விலங்குகளை விற்பனை செய்தல் மற்றும் பொது இடங்களில் விலங்குகளை விற்பனை செய்தல் போன்றன சட்டவிரோதமான செயல்கள் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சட்ட விதிகளை மீறுவோருக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், விலங்குகளின் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக விலங்கு நல ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதில் உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் 11 பேருடன், அமைச்சரினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளும் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri