ட்ரம்பை புகழும் நெதன்யாகு - எலான் மஸ்க்
வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்து அந்நாட்டை கைப்பற்றியமைக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜனாதிபதி ட்ரம்ப், சுதந்திரம் மற்றும் நீதிக்காக உங்கள் துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக்கு வாழ்த்துக்கள்.
உலகிற்கு வெற்றி..
உங்கள் தீர்க்கமான மன உறுதியையும், உங்கள் துணிச்சலான வீரர்களின் அற்புதமான செயலையும் நான் வணங்குகிறேன்” என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
Congratulations, President @realDonaldTrump for your bold and historic leadership on behalf of freedom and justice. I salute your decisive resolve and the brilliant action of your brave soldiers.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) January 3, 2026
அதேவேளை, எலான் மஸ்க்கும் ட்ரம்பினை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துக்கள், ஜனாதிபதி டிரம்ப்! இது உலகிற்கு கிடைத்த வெற்றி மற்றும் எல்லா இடங்களிலும் உள்ள தீய சர்வாதிகாரிகளுக்கு ஒரு தெளிவான செய்தி" என குறிப்பிட்டு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
Congratulations, President Trump!
— Elon Musk (@elonmusk) January 3, 2026
This is a win for the world and a clear message to evil dictators everywhere. https://t.co/GRI0XOxQFU