காசா போர் விவகாரம்: சர்ச்சையில் சிக்கிய இஸ்ரேலிய பிரதமர்
காசா போர் விவகாரம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிவிட்ட சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவென்றின் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போர் 23வது நாளை கடந்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அறிக்கையை வெளியிட்டார், இது எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது நட்பு நாடுகளிடமிருந்தும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
டுவிட்டர் பதிவில் சர்ச்சை
இதன் பின்னர் அவர் தனது வார்த்தைகளை சரிசெய்து, தவறு செய்ததாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய கொடிய தாக்குதலைத் தடுக்க அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் தவறிவிட்டதாக நெதன்யாகு சனிக்கிழமை இரவு தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்நிலையில், நெதன்யாகு தனது பதிவை அகற்றிவிட்டு, ஒரு புதிய பதிவில் "நான் தவறு செய்தேன்" என தெரிவித்துள்ளார்.
படையினருக்கு முழு ஆதரவு
பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பிறகு, தான் அவ்வாறு கூறியிருக்கக்கூடாது என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் நெதன்யாகு கூறியுள்ளார்.
மேலும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும், (IDF) தலைமைத் தளபதிகள், தளபதிகள் மற்றும் படையினருக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.