இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்தவர்களின் தொகையில் வரலாறு காணாத அதிகரிப்பு எட்டப்பட்டுள்ளதாக தகவல்
இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிபர திணைக்களத்தின் அடிப்படையில் இங்கிலாந்துக்கான 2022ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர்களின் தொகை 745,000ஐ எட்டியுள்ளதோடு இந்த தொகையானது கடந்த ஆண்டு மதிப்பிட்ட தொகையை விட 139, 000ஆல் உயர்வடைந்துள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் தொகையானது கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு ஜூன் வரையிலான 12 மாதங்களுக்கான புலம்பெயர் தொகை 672, 000ஆக காணப்படுவதோடு இது பிரித்தானிய அரசியலில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத அதிகரிப்பு
மீள்குடியேற்றங்களில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பானது, புதிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி மற்றும் பிரதமர் ரிஷி சுனக் மீது, இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பாரிய அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் 2023 ஜூன் வரையான 12 மாதங்களில் 1.2 மில்லியன் நீண்டகால மீள் குடியேற்றவாசிகள் இங்கிலாந்தில் காணப்படுவதோடு, அவர்களில் ஏறத்தாழ 1 மில்லியனுக்கும் அதிகமானோர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளை சேர்ந்தோர் என புள்ளிவிபர திணைக்களம் கூறுகின்றது.
2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சனத்தொகை 1 சதவீதமாக உயர்வடைந்துள்ளதோடு இது 1962ஆம் ஆண்டுக்கு பின்னரான விரைவான அதிகரிப்பாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |