26 சமூக ஊடக செயலிகளுக்கு அதிரடி தடை விதித்த முக்கிய நாடு
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உட்பட 26 சமூக ஊடக செயலிகளுக்கு நேபாள அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி அரசு உத்தரவிட்டிருந்தது.
ஏழு நாட்கள் அவகாசம்
இந்தநிலையில் தற்போது அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஓகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
புதன்கிழமை(3) இரவு காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.
எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
அதிரடி தடை
இந்தத் தடை நேற்றுமுன்தினம்(4) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது என்றும் அதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேபாள அரசாங்கத்தின் முடிவுக்கு பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri
