நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடி- எனினும் இலங்கையை விட ஸ்திரமான நிலை
நேபாளத்தில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயத்தின் கையிருப்பில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கான காரணம் என்று நேபாள நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையுடன் ஒப்பிடுகையில் பொருளாதார நிலைமை சிறப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் நேபாளிகளால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட பணம் குறைந்தமை என்பன இந்த நிலைமைக்கான காரணங்கள் என்று அந்த நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த வாரம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
நேபாள நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கியின் கூற்றுப்படி, 2022 பெப்ரவரி நடுப்பகுதி வரையிலான ஏழு மாதங்களில் வெளிநாட்டு நாணய கையிருப்பு 16%க்கும் அதிகமாக சரிந்து 1.17 ரில்லியன் நேபாள ரூபாய்களாக அதாவது 9.59 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் ஒரு வாரக்காலத்துக்கு கூட இறக்குமதிக்கான டொலர்கள் கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இந்தநிலையில் ஆராய்ச்சி நிறுவனமான கெபிட்டல் எகனாமிக்ஸின் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதார நிபுணர் அலெக்ஸ் ஹோம்ஸ், நேபாளத்தின் நிலைமை "இலங்கையை விட மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
