தீவிரமடையும் கோவிட் பரவல் - முழு ஊரடங்கை அறிவித்த அண்டை நாடு
இந்தியாவில் கோவிட் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உலகின் சில நாடுகளில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில்,இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலும் தற்போது கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை (28 ஆம் திகதி) முதல் ஏழு நாட்களுக்கு வங்கதேச அரசு, முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
அனைத்து விதமான பயணங்களுக்கும் திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை தொடர்பான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவசரமற்ற விடயங்களுக்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு வரை 15 சதவீதமாக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு விகிதம், தற்போது 21.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவது, வங்கதேசத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தலாம் என அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த முழு ஊரடங்கு அமுலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam