நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! பிணையில் சென்ற சந்தேகநபர் மீண்டும் கைது
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 32 பேர் உயிரிழந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரின் பெயரை வெளியிட குற்றப்புலனாய்வுத்துறை (சிஐடி) நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபரின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது அவர் சிறையில் இருந்துள்ளதுடன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனவே, சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் சிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வழக்கில் 32 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட நபர் நேற்று (11) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இதற்கமைய, அடையாள அணிவகுப்பிற்காக அவரை 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்வழக்கில் இதுவரை 62 சந்தேகநபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன, அவர்களில் 38 பேர் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
பெயர்ப் பட்டியல் மற்றும் 'பி' அறிக்கை
பாதுகாப்பு காரணங்களுக்காக சந்தேகநபர்களின் பெயர்கள் பகிரங்கமாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவில்லை என்றும், மேலும் பெயர்ப் பட்டியல் மற்றும் 'பி' அறிக்கை ஆகியவை குற்றப் புலனாய்வுத் துறையால் நீதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட 62 கைதிகளும் ஆகஸ்ட் 21 திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 சிறை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
natural home remedies : நரைமுடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு! வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்புகள் Manithan