நீர் கொழும்பு சிறைச்சாலை மோதலுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு விசேட நட்டஈடு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு விசேட நாட்ஈட்டுக் கொடுப்பனவுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்டு உயிரிழந்த மற்றும் காயமடைந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் வரையில் நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டஈட்டுத் தொகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுவாகஅரச நிர்வாக சுற்று நிறுவங்களுக்கு ஏற்ற வகையில் அரச ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் நட்டு ஈட்டு தொகைக்கு மேலதிகமாக இந்த நாட்டஈடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பூரண உடல் ஊன நிலைகளை எதிர் நோக்கிய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா 5 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி அளவில் ஊனமுற்ற அதிகாரிகளுக்கு நான்கு மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறைச்சாலைகளில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமைகளின் போது மூலோபாயங்களை வகுத்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வருவது தொடர்பில் விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறை கைதிகளுக்கு நட்டஈடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படாமை தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் நட்டஈடு வழங்குவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நான்காம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் இடம் பெற்ற பாரிய மோதல் சம்பவத்தில் 10 அதிகாரிகளும் 20-க்கும் மேற்பட்ட கைதிகளும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.