விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்! மாவட்ட செயலாளர்களுக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை

Sri Lanka Politician Government Of Sri Lanka
By Rakesh Jun 13, 2026 01:11 AM GMT
Report

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், "விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.அச்சுதனுடன் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் ஆராய்ந்திருந்தோம். அதற்கமைவாக நாம் சில துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது." என்று தெரிவித்தார்.

அம்பாறையில் குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு - இரு பொலிஸார் இடைநிறுத்தம்

அம்பாறையில் குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு - இரு பொலிஸார் இடைநிறுத்தம்

 மிகப் பெரிய திட்டங்கள் 

மேலும் அவர், "வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட விளையாட்டுத்துறையின் அபிவிருத்தி சார்ந்த தேவைகளை விளையாட்டு உத்தியோகத்தர்கள் முறையாக அடையாளங்காண வேண்டும்.

விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்! மாவட்ட செயலாளர்களுக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை | Needs Sports Industry Must Be Presented Quickly

அத்தேவைகளை மாவட்ட செயலாளர்கள் ஊடாக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்வைப்பதன் மூலம் எமக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மாகாணத்துக்கான மிகப் பெரிய திட்டங்களை மாகாண விளையாட்டுத் திணைக்களம் தயாரித்து, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று, கேள்விப்பத்திரங்கள் மூலம் ஒப்பந்தங்களை வழங்கிய பின்னரே அதற்கான நிதியை அவர்கள் விடுவிப்பார்கள்.

எனினும், இந்த ஆண்டுக்குள் மிகப் பெரிய திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான கால அவகாசம் குறைவாகக் காணப்படுவதால், நடப்பு ஆண்டுக்குள் நிறைவேற்றக்கூடிய சாத்தியமான திட்டங்களை மாத்திரம் துரிதமாக முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணத்தில் விளையாட்டுப் பயிற்சிகளை முன்னெடுக்கும் பாடசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களின் பட்டியல் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாவட்ட செயலாளர்களுக்கு முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நீதிமன்ற விவகாரத்தில் நடு நடுங்கும் மகிந்த தரப்பு! தொடரும் திகில் நகர்வுகள்

நீதிமன்ற விவகாரத்தில் நடு நடுங்கும் மகிந்த தரப்பு! தொடரும் திகில் நகர்வுகள்

அரச காணி

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பொருத்தமான காணி கோரப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு மைதானத்துக்கான காணி அடையாளங்காணப்பட்டு, அதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்! மாவட்ட செயலாளர்களுக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை | Needs Sports Industry Must Be Presented Quickly

யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தனது கருத்தில், மாவட்டத்தில் பொருத்தமான அரச காணியை அடையாளம் காண்பதில் நடைமுறையிலுள்ள சிக்கல்களைத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், விளையாட்டுக் கழகங்களுக்கு உதவிகளை வழங்குவதற்குக் கழகங்களின் மைதானக் காணி உரிமங்களில் சில சட்டச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, மன்னார் மாவட்டத்திலிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மன்னார் மாவட்ட செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். விளையாட்டுத்துறை மேம்பாடு சார்ந்த இந்தச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளை ஆளுநர் அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் மேலதிக மாவட்ட செயலாளர்கள், மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நாட்டில் எதிர்வரும் மணித்தியாலயங்களில் பலத்த காற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் மணித்தியாலயங்களில் பலத்த காற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US