யாழ். நெடுந்தீவுக்கு பாதுகாப்பான கடல் போக்குவரத்து மற்றும் வீதி புனரமைப்பு செய்ய வேண்டும் - சிறீதரன் கோரிக்கை
யாழ். நெடுந்தீவுக்கு பாதுகாப்பான கடல் போக்குவரத்து மற்றும் வீதி புனரமைப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.
இதன்போது நெடுந்தீவு பிரதேசத்திற்கான கடல் போக்குவரத்து மற்றும் நெடுந்தீவில் காணப்படுகின்ற வீதி புனரமைப்பு, குடிநீர் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தைப் பொறுத்தவரையில் இங்கு வாழும் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்றும் இவர்களுக்கு பாதுகாப்பான பொது போக்குவரத்து உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார் .
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நெடுந்தீவின் பிரதான வீதியாக காணப்படுகின்ற மாவிலி துறை முதல் கோட்டைக்காடு வரைக்குமான சுமார் 7.4 கிலோ மீட்டர் வீதி உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இந்த வீதி இப்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.
நெடுந்தீவு மேற்கையும் நெடுந்தீவு கிழக்கையும்இனைக்கின்ற ஓர் இணைப்பு வீதியாக இது காணப்படுகின்றது
இந்த வீதியின் முக்கியத்துவத்தைக் கருதி இதை விரைவாக புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்க வேண்டும்.
குறிப்பாக இந்த வீதி தொடர்பில் நாங்கள் கடந்த காலங்களில் அது சார்ந்த அமைச்சுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து இருந்தோம் இந்தப்பிரதேசத்தில் கூடிய அக்கறை செலுத்தி அதன் அபிருத்தியை முன்னெடுத்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
