ஐந்து ஆண்டுகளில் நாட்டை மாற்ற முடியாது - ரில்வின் சில்வா
ஐந்து ஆண்டுகளில் நாட்டை மாற்ற முடியாது என சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கூறியதாக, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு குறைந்தபட்சம் 15 – 20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் தம்மிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் மனோநிலை
தற்பொழுது நாட்டின் ஆட்சியை முன்னெடுக்கும் கட்சி என்ற வகையில் செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் மனோநிலையில் இருந்து பிரச்சினைகளை பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இடதுசாரி கொள்கைகளை கற்றுக்கொண்டதாகவும் தற்பொழது ஆட்சி செய்வது குறித்து கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு துறைகளில் எமது கட்சிக்கு உதவகளை வழங்கத் தயார் என சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
