நான்காயிரத்தை நெருங்கும் சிறைச்சாலைக் கொத்தணி: நேற்றும் 40 கைதிகளுக்குத் தொற்று உறுதி
நாட்டில் நேற்றும் மேலும் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சிறைச்சாலை கொத்தணியில் நேற்று மேலும் 40 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரையான தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஆண் கைதிகள் 37 பேரும் பெண் கைதிகள் மூவருமாக நேற்று 40 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மொத்தத் தொற்றாளர்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் 846 பேருக்கும், மகசின் சிறைச்சாலையில் 830 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam