பல நிபந்தனைகளுடன் நாவலப்பிட்டி – கண்டி வீதி திறப்பு
திட்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்' ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களின் பின்னர் மீள மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
எனினும் வீதிக்கு மேல் பல்வேறு இடங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அதற்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் வரை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக வீதி அமைக்கப்பட்டு பல நிபந்தனைகளுடன் முற்றாக பொதுமக்களின் பாவனைக்காக இன்று (15) திறந்து விடப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
விதிமுறைகளை மீறுதல்
அத்துடன் குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல் வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடைபயணம் மற்றும் பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு சில விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை இவ்விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புனரமைப்புப் பணி
வீதியைத் திருத்தும் பணிகள், இராணுவத்தின் 6 ஆவது பொறியியல் படைப்பிரிவு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நாவலப்பிட்டி மற்றும் எத்கல பொலிஸ் நிலையங்கள், பஸ்பாகே கோரல பிரதேச சபை உள்ளிட்ட பல தரப்பினரின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை உலப்பனை – கண்டி வீதியின் புனரமைப்புப் பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



