சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் : பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

Sri Lanka Police Batticaloa Sri Lanka
By P.sasikaran Jan 30, 2024 05:10 AM GMT
Report

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நாவலடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

எனினும், குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நாவலடி பொது மக்களால் நேற்று (29.01.2024) காத்தான்குடி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த நபரின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது

ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது

பொய்யான முறைப்பாடு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த பெண் சுமார் 8 மாத காலமாக உயிரிழந்த நபருடனும் மற்றைய கணவரோடும் வாழ்ந்து வந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.


குறித்து சம்பவம் கிராம மக்களுக்கு தெரியவந்ததையடுத்து நாவலடி கிராம மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து குறித்த பெண்ணையும் அவரது கணவரையும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், பெண்ணின் நடவடிக்கை கிராமத்துக்கு அவ பெயர் வரும் என்ற காரணத்தினால் பெண்ணையும் கணவரையும் அக்கிராமத்தில் இருந்து வெளியேற்றுமாறும் கூறியுள்ளனர்.

பெண்களின் இரவு நேர பணி குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

பெண்களின் இரவு நேர பணி குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இந்நிலையில், குறித்த பெண் பொலிஸாரிடம் பொய்யான முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களை கைது செய்யுமாறு கோரியுள்ளார்.

இதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருந்து தங்களது முறைப்பாட்டை கூட பதிவு செய்யவில்லை எனவும் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


நீதியான விசாரணை 

எனினும், அவ்விடத்திற்கு வருகை தந்த மரணமடைந்த நபரின் தாயார் தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மகனுக்கான நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த கிராம மக்கள் கிராமம் சார்பாக முறைப்பாடு ஒன்றினை எழுதி கையொப்பமிட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் கையளித்து அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இன்று காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் : பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் | Nawaladi Civilians Besieged The Police Station

எனினும், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்தாரா என்ற பாரிய சந்தேகங்களும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு

18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு

மரக்கறி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

மரக்கறி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US