போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படம்பிடித்த கடற்படை வீரர்
போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்களை அச்சுறுத்தும் விதத்தில் கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மாதகல் - குசுமாந்துறையில் உள்ள தனியார் இருவருக்கு சொந்தமான காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கிருந்த கடற்படை வீரர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படம்பிடித்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.
இதேவேளை அங்கிருந்த புலனாய்வாளர் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது கை காட்டி மிரட்டி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிய கடற்படையினர் போராட்டக்களத்தில் வரிசையாக நின்றனர்.
மக்களது ஜனநாயக முறையிலான போராட்டத்தை ஒடுக்கும் விதமாக இவ்வாறு செயற்படுவது, அரசின் அராஜக போக்கினை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்றும் கடற்படை வீரர் ஒருவர் மாதகலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை மிரட்டும் விதத்தில் படம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி.......
யாழில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு (PHOTOS)
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan