யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சட்டவிரோதமாக கணவாய் பிடிப்பதற்காக புறப்பட்ட கடற்றொழிலாளர்களை வழிமறித்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நேற்று(13.03.2024) கட்டைக்காடு கடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பொன்றை முன்னெடுத்த போதே சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
இதே வேளை மின் ஒளி பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் நேற்று கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் அண்மை நாட்களாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் Cineulagam
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam