2021ம் ஆண்டில் 15 பில்லியன் ரூபா பெறுமதியிலான போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்!
தேசத்தின் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நனவாக்குவதில் இலங்கை கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் மாத்திரம், கடற்படையினர் தீவுக்கடல் மற்றும் கடல்பகுதிகளில் வெற்றிகரமான போதைப்பொருள் சோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான சட்டவிரோத போதைப்பொருள்களை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி ரூபா 15.86 பில்லியன் ஆகும்.
போதைப்பொருள் கடத்தல் உட்பட அனைத்து வகையான சட்டவிரோத நடவடிக்கைகளையும் முறியடிப்பதற்காக கடற்படையினர் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து தீவைச் சுற்றியுள்ள கரையோரக் கடற்பரப்பில் மட்டுமன்றி சர்வதேச கடற்பரப்பிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் விளைவாக, 2021 ஆம் ஆண்டில் கடற்படை இந்த பாரிய போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். தீவு கடற்பரப்பில் 74 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில், 119 வெளிநாட்டு மற்றும் 22 உள்ளூர் சந்தேக நபர்களுடன் 1268 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேபோன்று, 2021 ஆம் ஆண்டு 7095 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 186 உள்ளூர் மற்றும் 07 வெளிநாட்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் 151 சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடற்படையினரால் நடத்தப்பட்ட 73 சோதனை நடவடிக்கைகளில் 158 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைபொருள் உடன் 98 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடற்படையினர் மேற்கொண்ட 16 சோதனை நடவடிக்கைகளில் 69 கிலோவுக்கும் அதிகமான உள்ளூர் கஞ்சாவுடன் 27 சந்தேக நபர்களையும், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 08 சோதனை நடவடிக்கைகளின் போது 88 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் போதைப்பொருளுடன் மேலும் 09 உள்ளூர் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோரின் ஒருங்கிணைப்பின் கீழ், 2022 ஆம் ஆண்டு வரை இந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த கடற்படை தீர்மானித்துள்ளது.
நாட்டின் வருங்கால சந்ததியை போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற, அரசின் முயற்சிகளை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
