சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்...!
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நியமனம், நாளை மறுதினம் (13.06.2023) வழங்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்றைய தினம் (10.06.2023) ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நவீன் திஸாநாயக்க நியமனம்
சப்ரகமுவ ஆளுநராகக் கடமையாற்றிய டிக்கிரி கொப்பேகடுவ நேற்றைய தினம் (10.06.2023) தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்தே சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார்.
2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மத்திய மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய கொப்பேகடுவ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் சப்ரகமுவ ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



