நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
யாழ்.துணுகாய் மல்லாவி பகுதியில் நள்ளிரவு வேளையில் கடை உடைத்து தொலைபேசிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மல்லாவி பகுதியில் நேற்றைய தினம் வியாபார நடவடிக்கை ஈடுபட்டிருந்த தொலைபேசி கடை உரிமையாளர், நேற்றைய தினம் மாலை கடையினைப் பூட்டிவிட்டு வீடு சென்று இன்று(15-10;2022) காலை கடையினை திறப்பதற்காக வந்த வேளை கடை உடைக்கப்பட்டு தொலைபேசிகள் திருடப்பட்டு அங்கிருந்த பணங்கள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் மல்லாவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை கடை உரிமையாளரினால் நேற்றைய தினம் வியாபார நடவடிக்கைகள் செய்யப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் வந்திருந்த சந்தேக நபர் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில்18 வயதான அதே இடத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு,சந்தேகநபரிடமிருந்து களவாடப்பட்ட தொலைபேசிகள் மற்றும் பணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பருத்தித்துறை
பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடி அதில் சென்று பாடசாலைக்கு பிள்ளையை அழைத்துச்சென்ற பெண் ஒருவரின் தங்கச் சஙகிலியை அறுத்த நபர்கள் இருவர்
செய்யப்பட்டுள்ளதுடன், 5.5 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிளுடன் பெறுமதியான கைத்தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாகவும்,மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வடமராட்சி
வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது, நேற்று அல்வாய் பகுதியில் வைத்து 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபரின் உடமையிலிருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த கும்பலைச் சேர்ந்த மற்றையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய்
கோவில் கும்பிட்ட பெண்ணின் கைப்பை அபகரிப்பு - சண்டிலிப்பாயில் சம்பவம்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் - சீரணி அம்மன் ஆலயத்தினை தரிசிக்க வந்த பெண்ணின் கைப்பை களவாடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (14) குறித்த பெண் ஆலயத்தை தரிசிக்க வந்த பெண் மோட்டார் சைக்கிளில் தனது கைப்பையினை வைத்துவிட்டு ஆலயத்தினை தரிசித்துவிட்டு திரும்பி வந்து பார்த்த வேளை கைப்பை களவாடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது. அந்த கைப்பையில் கைத்தொலைபேசி இருந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri