பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் இரு அணிகள் சாம்பியன்களாக வெற்றி
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரியின் 17, 20 வயது அணிகள் இரண்டும் சாம்பியன்களாகியுள்ளன.
குயின்சி தலைமையிலான 20 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் பொலனறுவை பென்டிவெல கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் லயன்சிகா, அணித் தலைவி குயின்சி ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது பாதியாட்டத்திலும் லயன்சிகா, குயின்சி ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சாம்பியனாகியுள்ளது.

மகாஜனா முன்னிலை
உமாசங்கவி தலைமையிலான 17 வயது மகாஜனா பெண்கள் அணி இறுதியாட்டத்தில் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் பெரு வெற்றிபெற்றது.

இதன்படி, முதல் பாதி ஆட்டத்தில் அணித்தலைவி உமாசங்கவி, கல்சிகா ஆகியோரது கோல்களுடன் 2:0 என மகாஜனா முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது பாதியாட்டத்திலும் உமாசங்கவி, கியூஸ்ரிகா ஆகியோர் அதிரடியாக ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக்கொடுக்க மகாஜனா 4:0 என சாம்பியனாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri